2026 மே 04, திங்கட்கிழமை

சுவாமி விபுலானந்தரின் ஜனன தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மே 03 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், எம்.சுக்ரி)

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 120ஆவது  ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பு நகரிலுள்ள சுவாமி விபுலானந்தர் நினைவிடத்தில் இன்று வியாழக்கிழமை ஜனனதின நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது சுவாமி விபுலானந்தரின்  திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு  சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. இதனையடுத்து  தமிழுக்கும் அதன் வளர்ச்சிக்கும் சுவாமி விபுலானந்தர் ஆற்றிய பணிகள் நினைவுகூரப்பட்டதுடன், அவரின் முக்கியத்துவம் தொடர்பிலும் உரையாற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் க.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டுக்குழு செயலாளர் ஜெயராஜா, மாநகர சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 120ஆவது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள அன்னாரின் சமாதியில் ஜனன தின நிகழ்வொன்றும் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமார், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு குழு முக்கியஸ்த்தர்கள் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள்; என பலர் கலந்துகொண்டனர். இதன்போது சுவாமியின் சமாதியில் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் விஷேட வழிபாடுகளும் நடைபெற்றன.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .