2026 மே 04, திங்கட்கிழமை

பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்ப உதவுவோம்: ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்

Super User   / 2012 மே 03 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித்)


'பாதிக்கப்பட்ட உங்களது பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் உதவி செய்கிறோம், அதே போன்று எங்களது நாடுகளுக்கு உதவிகள் தேவைப்படும் வேளை ஒத்துழைப்புக்களைத் தர வேண்டும்' என ஐரோப்பிய ஒன்றியமானது மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் கேட்டுக்கொள்கிறது என  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தெற்காசிய நாடுகளுடனான நட்புறவுகளை வலுப்படுத்துவதும் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை செயற்கை அனர்த்தங்களின் போது ஏற்பட்ட பாதிப்புக்கின் மீளமைப்புக்கென தாங்கள் வழகங்கிய நிதிகளினால் ஏற்பட்டிக்கும் மாற்றங்கள் என்பவற்றினை மதிப்பிடும் நோக்கில் இந்த ஐரோப்பியப் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில், இக் குழுவின் தலைவியாக இங்கிலாந்தினைச் சேர்ந்த கௌரவ திருமதி ஜீன் லம்பேர்ட், சிவில் சுதந்திரங்கள் நீதி மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குழுவின் தலைவர் கௌரவ யுவான் லோபேஸ் அகிலர், வெளிவிவகார அலுவல்கள் குழுவின் உறுப்பினர் ஜனஸ் வைதரே, பொதுச் செயலக உறுப்பினர் கௌரவ பிலிப்பி கமாரிஸ், அரசியல் ஆலோசகர் சபீஸ் மேர்யர் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
 
இவர்களுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் டப்ளியூ.எம்.தர்மபால, சம்பிரதாய உத்தியோகத்தர் ஏ.டப்ளியூ.எம்.பௌஷி ஆகியோரும் மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை மாலை நடை பெற்ற உயர் மட்டக்கலந்துரையாடலில், கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவின் தலைவி திருமதி ஜீம் லம்பேர்ட், 'உங்களுடைய பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் உதவி செய்கிறோம், அதே போல் எங்களது நாடுகளுக்கு உதவிகள் தேவைப்படும் வேளை ஒத்துழைப்புக்களைத் தர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியமானது மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் கேட்டுக்கொள்கிறது.
 
கடந்த வருடம் நாங்கள் வருகை தந்த போது மட்டக்களப்பு மாவட்டம் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது, மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டுள்ளததைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.
அதே நேரம் அநேகமான நிதி வழங்குனர்கள் வடக்கை நோக்கி தங்களது கவனத்தை செலுத்துகிற அதே வேளை கிழக்கின் மீள் கட்டுமானத்துக்கான செயற்பாடகள் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையுடன் வந்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.
 
லத்வியா நாட்டுப்பிரதிநிதி கருத்துத் தெரிவிக்கையில், எங்களுடைய நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மிகக் குறைந்த செலவில், மிகத் தரமான மருத்துவக் கல்வியை வழங்குகின்றன. ஏனைய பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது. ஆனால் வேறு நாடுகளுக்குக் கல்வி கற்க செல்பவர்கள் எங்களது நாட்டினையும் தேர்ந்தெடுக்கலாம். நாங்கள் அதனை வரவேற்கிறோம் எனத் தெரிவித்தார்.
 
அத்துடன், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தொழில்நுட்பக் கல்வி அபிவிருத்தி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் தேவைகளை நிறைவ செய்வதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கின்றனவா என அவர்கள் அதிகாரிகளிடம் வினவினர். அதே நேரம், கூடுதலாக சுற்றாடலுக்குத் தீமை பயக்காத வகையில் அழகான முறையில் தமது நிதிகளைக் கொண்டு குளங்கள் புனரமைக்கப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில், ஜேர்மனியின் பசுமைக் கட்சி, லத்வியா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் சோசலிச ஜனநாயகக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாகும்.
 
மாவட்ட செயலகக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட சிவில் சமூகங்கள் சார்பில் கலந்து கொண்ட மாவட்ட உள்ளுர் இரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் உப தலைவர் கமலதாஸ், 'முரண்பாடுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்ற மகாவலி அபிவிருத்தித்திட்டம், தேக்கு மர அபிவிருத்தி வளர்ப்புத்திட்டம், சூறாவளி காரணமாக அழிந்து பொன் தென்னை முந்திரிகைத் தோட்டங்களை மீளக் கொண்டுவருதல் வேண்டும்' எனக் கோரினார்.
 
'இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாப்பிரச்சினையினால் மத்தியகிழக்கு போன்ற வெளிநாடுகளுக்குச் செல்கின்ற நிலை காணப்படுகிறது. அதனால் உள்நநாட்டிலேயே வெளிநாட்டு மதலீடுகளைக் கொண்ட சிறந்த தொழிற்சாலைகளை நிறுவமுடியும். சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய துறைசார் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் அரம்பிக்கப்பட்டுள்ளன.
 
ஆனால், தகுதி பெற்ற வளதாரிகளோ போதுமான உபகர வசதிகளோ இல்லை. அரசாங்கத்தினால் தொழில் நுட்பப் பல்லூரிகள் மேலும் நிறுவப்பட்டு வருகின்றன ஆனால் அவற்றிலும் வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றன அவற்றினை நிவர்த்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டால் சிறப்பாக அமையும்' என ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் புதன்கிழமை காலை யுத்தத்தால் மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட கிரான் பிரதேசத்தின் குடும்பி மலை பிரதேசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்ட மீரானக்கடவை குளத்தினைப் பார்வையிட்டதுடன், குடும்பிமலை குமரன் வித்தியாலயத்தில் மக்களுடனும் கலந்தரையாடினர்.

அதன்போது, தமது திட்டங்களின் பிரயோசனங்கள் மற்றும் மக்களது தற்போதைய பிரச்சினைகள், தேவைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டதுடன், மிகவும் சிரமங்களை மக்கள் அனுபவித்து வருவதாகவும், வீதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் பல இருப்பதாகவும் இத் தகவல்களை தாம் தமது நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .