2026 மே 04, திங்கட்கிழமை

கமநெகும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூரில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 மே 05 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கமநெகும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்திற்கு பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏறாவூர் நகரசபை முதல்வர் அலிஸாஹிர் மௌலானா இந்த வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் 17 கிராம சேவகர் பிரிவுகளுக்குமான அபிவிருத்தி வேலைத்திட்டத் திட்டம் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஓட்டுப்பள்ளி பரிகாரியார் வீதி, கிராம நீதிமன்ற குறுக்கு வீதி ஆகிய வீதிகளுக்கான  புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இந் நிகழ்வுகளில் நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், நகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

2012ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட சகல வீதிகளையும் பலகோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் இலக்கும் திட்டமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .