2026 மே 04, திங்கட்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

Kogilavani   / 2012 மே 05 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித், ஏ.எச்.ஏ.ஹுஸைன்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்தில், மட்.வின்சட் மகளீர் தேசிய உயர்தர பாடசாலையின் பிரதி அதிபர் தங்கேஸ்வரி நாகரெட்னம் (55வயது) என்பவர் உயிரிழந்துள்ளடன் அவரது மகனான நரேந்திரகுமார்(22வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்தில் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரதி அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவரது, சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .