2026 மே 04, திங்கட்கிழமை

குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 மே 05 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட குளுவினமடு கிராமம், மண்முனை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜெய்க்கா திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணசபை, உள்ளூராட்சி மன்றங்கள், உள்ளூராட்சி திணைக்களங்களின் அணுசரணையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் அடிப்படையில், குளுவினமடு கிராமத்தில் 45 மில்லியன் ரூபா செலவிலும், தாந்தாமலையில் 32 மில்லியன் ரூபாய் செலவிலும் நிர் விநியோக திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுகளில், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி எஸ்.நமசிவாயம், பிரதேச செயலாளர் திருமதி எஸ்.வில்வரெத்தினம், மண்முனை மேற்கு பிரதேசசபை தவிசாளர் ரீ.பேரின்பராஜா மற்றும் உயர் அதிகாரிகள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .