2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் வெசாக்தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மே 06 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு நகரில் படையினரால் அமைக்கப்பட்ட 231ஆவது வெசாக் வலயத்தினை மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் நேற்று சனிக்கிழமை மாலை ஆரம்பித்து வைத்தார்.

இந்த வெசாக் வலயத்தில்  20க்கும் மேற்பட்ட வெசாக் அலங்கார கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி சதுக்கத்தில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் உட்பட இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .