2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. விகாராதிபதியின் செயற்பாடு குறித்து போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விளக்கம்

Menaka Mookandi   / 2012 மே 06 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரசேத்தின் எல்லைப்பகுதியான சின்னவத்தை பகுதிக்கு சென்று மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அங்குள்ள தமிழ் மக்களை அச்சுறுத்திவருவதாகவும், தமிழர்கள் குடியிருக்கும் காணியுரிமையாளர்களை அது சிங்களவர்களின் காணி நீங்கள் இதில் இருந்து வெளியேறவேண்டும் என அவர் மிரட்டிவருவதாகவும் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விநாயகமூர்த்தி சிறிதரன் தெரிவித்தார்.
 
இவ்விடயம் குறித்து தவிசாளர் சிறிதரன், மேலும் தெரிவித்ததாவது,
 
போரதீவுபற்றின் சின்னவத்தையில் அதிகளவான தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலத்தில் சில சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு காணியை விற்றுவிட்டு சென்றுவிட்டனர்.
 
இந்த நிலையில் அப்பகுதிக்கு திடிரென வந்த மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அப்பிட்டிய சுணமரத்ன தேரர், அப்பகுதி தமிழ் மக்களை மிட்டியுள்ளார். இது தொடர்பில் எனக்கு மக்கள் தெரிவித்த புகாரையடுத்து அப்பகுதிக்கு சென்றபோது விகாராதிபதியிடம் அப்பகுதி நிலைமையினை எடுத்துக் கூறினேன்.
 
எனினும் தமிழர்கள் சிங்களவர்களின் காணியை அபகரித்துவிட்டதாகவும் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் மிரட்டினார்.
 
எனினும் இது பிரதேச செயலாளரும் காணியின் உரிமையாளர்களும் காணியின் உரிமையாளர்களும் பார்க்கும் விடயம் இதில் நீங்கள் தலையிடாமல் செல்லுங்கள் என அவரிடம் தெரிவித்திருந்தேன்.
 
அதனை, தான் அவரை மிரட்டியதாக பல இடங்களிலும் புகார் அளித்துள்ளார். அவர் இங்கு ஒற்றுமையுடன் இருக்கும் இரு சமூகத்துக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் பிரசேத்தில் உள்ள சிங்கள மக்களும் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பில் அப்பகுதியில் உள்ள இரு சமூகங்களும் மிகவும் அவதானமாகவே உள்ளன. எனினும் தம்மை தவிசாளர் கடத்தி மிரட்டியதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .