2026 மே 04, திங்கட்கிழமை

புனர்வாழ்வு பெற்றுவரும் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வெசாக் பக்திகீத நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மே 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

கந்தக்காடு மற்றும் சேனபுர புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வெசாக் பக்திகீத நிகழ்வு  வாகரை பொது விளையாட்டரங்கில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு ஆரம்பமான பக்திகீத நிகழ்வு இன்று திங்கட்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

வாகரை 233ஆவது இராணுவ படைப்பிரிவு தலைமையகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வை,  வாகரை 233ஆவது படைப்பிரிவு இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரி கேணல் எம்.ரத்னசிறி நெறிப்படுத்தினார்.

வாகரை 233ஆவது படைப்பிரிவு கட்டளைத்தளபதி கேர்ணல் குமார் ஜெயசுந்தர,  கிழக்கு மகாண புனர்வாழ்வுப் பணிப்பாளர் கேணல் சிறிசாந்த, புனர்வாழ்வு பெற்றுவரும் புலிகளின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .