2026 மே 04, திங்கட்கிழமை

வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 மே 08 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிகரம் கிராமத்திலுள்ள மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இவ் வாழ்வாதார உபகரணங்கள் ஹிறா பவுண்டேசனின் நிதியுதவியின் கீழ் சிகரம் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொண்டு உபகரணங்கைள மக்களுக்கு வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது இங்குள்ள 30 குடும்பங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் ஆடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .