2026 மே 04, திங்கட்கிழமை

இரு இந்திய புடவை வியாபாரிகளுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 மே 08 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் கைதுசெய்யப்பட்ட இரு இந்திய புடவை வியாபாரிகளை இன்று செவ்வாய்க்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து அனுமதியின்றி புடவை வியாபாரத்தில்  ஈடுபட்டார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட  இவ்விரு இந்திய புடவை வியாபாரிகளும் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்களை நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

தமிழ் நாட்டை சேர்ந்த வி.முருகன் (வயது 46), பி.சண்முகநாதன் (வயது 39) ஆகியோரையே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 85,000 ரூபா பெறுமதியான  புடவை வகைகளையும் விசேட அதிரடிப்படையினர் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .