2026 மே 04, திங்கட்கிழமை

வாகரை பிரதேச சபை பிரதி தவிசாளர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைவு

Super User   / 2012 மே 08 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


வாகரை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சீனித்தம்பி பேரின்பராசா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டார்.

வாகரை, கதிரவெளியில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபாலவிடமிருந்து கட்சியின் அங்கத்துவத்தை  அட்டையை சீனித்தம்பி பேரின்பராசா பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாகரை, புச்சாங்கேணி மத்திய குழுவின் பிரதி தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளளர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமயிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சார்பாக வாகரை பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு 3,452 விருப்பு வாக்குகளை பெற்று வாகரை பிரதேச சபையின் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .