2026 மே 04, திங்கட்கிழமை

கிரானில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசாங்கம் நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 மே 08 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)


மட்டக்களப்பு கிரான் செயலகப்பிரிவிலுள்ள ஊத்துச்சேனை மற்றும் வடமுனை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய மினிச்சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.

இச்சூறாவளியினால் 46 வீடுகள் முழுமையாகவும் 149 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜா தெரிவித்தார். 

197 குடும்பங்களைச் சேர்ந்த 772பேர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்ப்படுகிறது. ஆனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் குறித்த பிரதேசங்களுக்கு சென்று மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இம்மதிப்பீட்டறிக்கை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக உரிய அமைச்சருக்கு அனுப்பப்படுமென்று நிலைய அதிகாரி குறிப்பிட்டார்.

சூறாவெளி வீசியதையடுத்து அப்பிரதேச மக்கள் தமது குடியிருப்புக்களை விட்டு இடம்பெயர்ந்து ஊத்துச்சேனை பாடசாலைக்கட்டிடத்தில் தங்கியிருந்து தற்போது மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .