2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடியில் பல கொள்ளைச் சம்பவங்கள்

Suganthini Ratnam   / 2012 மே 09 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளளன.

கடந்த 4ஆம் திகதி காத்தான்குடி பிரதேசத்தின் மீராப்பள்ளி வீதியிலுள்ள மீராசாகீப் முகம்மது நஸீம் என்பவரின் வீட்டுக்  கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதன்போது 5  தங்க மோதிரங்கள், 2 தங்க வளையல்கள் ஆகியவற்றுடன் 65,000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 5ஆம் திகதி பாநஉல்ல வீதியை சேர்ந்த முகம்மது அலி முகம்மது காரூன் என்பவரினதும் வீடு  உடைக்கப்பட்டு 5 பவுன் தங்க நகையுடன் 10,000 ரூபா பணம், 4 கைக்கடிகாரங்கள், ஒரு கைத்தொலைபேசி ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .