2026 மே 04, திங்கட்கிழமை

எச்.ஐ.வி. தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 மே 10 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான எச்.ஐ.வி எயிட்ஸ் நோய்  தொடர்பான பயிற்சி செயலமர்வு நேற்று புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

சத்துருக்கொண்டான் சர்வோதய மண்டபத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகமும் மாவட்ட இளைஞர் சம்மேளனமும்  இணைந்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையுடன் இச்செயலமர்வை நடத்தியது.

இச்செயலமர்வில் கிழக்கு மாகாணத்திலிருந்து 27 பேர் பங்குகொண்டிருந்தனர். இவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஜே.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இவ் இறுதிநாள்  செயலமர்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, தேசிய இளைஞர் சம்மேளனத்தின் செயலாளர் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .