2026 மே 04, திங்கட்கிழமை

காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய பாடசாலை மாணவர்களின் வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கை நிறைவு

Kogilavani   / 2012 மே 10 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட காவத்தமுனை அல் அமீன் வித்தியாலய  மாணவர்கள் மேற்கொண்ட ஆரப்பட்டம் நிறைவுக்கொண்டு வரப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் செயற்பாடுகள் இன்று வியாழக்கிழமை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இப்பாடசாலையில் நிலவும் ஆசிரியர் ஆளணி பற்றாக்குறையை  நிவர்த்தி செய்யக்கோரி இப்பாடசாலை மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வகுப்புக்களை பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை மாலை இப்பாடசாலைக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.செயினுதீன், மற்றும் பிரதி வலய கல்விப் பணிப்பாளர் சேகுஅலி உட்பட அதிகாரிகள் குழு வழங்கிய வாக்குறியை அடுத்து இப்பாடசாலை இன்று திறக்கப்பட்டு வழமை நிலைமைக்குத் திரும்பியது.

இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உட்பட காவத்தமுனை முக்கியஸ்த்தர்கள், பொது நிறுவனங்கள் பங்கு கொண்ட கூட்டமொன்று பாடசாலை மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதன்போது, இப்பாடசாலைக்கு ஆறு ஆசிரியர்களை தருவதாக இக் கூட்டத்தில் வலயக் கல்விப பணிப்பாளர் உறுதி மொழி வழங்கியதாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் தெரிவித்தார்.

இந்த உறுதிமொழியை எழுத்து மூலம் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கவேண்டுமென கேட்டதையடுத்து இந்த உறுதி மொழி பாடசாலை குறிப்பு புத்தகத்தில் எழுதப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து இன்று பாடசாலை வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளதுடன் மாணவர்கள் பாடசாலைக்கு சமூமளித்துள்ளதாகவும் வழமையான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் பாடசாலை அதிபர் எம்.யு.எம்.நசீர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .