2026 மே 04, திங்கட்கிழமை

காலாவதியான உணவு விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 மே 10 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஹோட்டல்கள் மற்றும் புட்சிற்றி என்பவற்றில் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின்போது காலாவதியான மற்றும் மனித பாவணைக்குதவாத உணவுப் பொருட்கள் உட்பட பழுதடைந்த  பல பொருட்களை கண்டுபிடித்து கைப்பற்றியதாக ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

மனித பாவனைக்குதவாத காலவாதியான பொருட்களை விற்பனை செய்த மேற்படி ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் புட்சிற்றி உரிமையாளர்கள் நான்கு பேர் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது இவர்கள் நான்கு பேருக்கும் தலா 5000 ரூபா அபராதம் செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதுடன் இவர்களை எச்சரித்து விடுதலை செய்தார் என ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .