2026 மே 04, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரென கருதப்படும் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 11 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் இடம்பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் 5  கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கொள்ளைச் சம்பவங்கள்  வீடுகளிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது தங்கநகைகள், பணம்,  கையடக்கத்தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இக்கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்நபர், விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .