2026 மே 04, திங்கட்கிழமை

புணானை விநாயகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டமைக்கு யோகேஸ்வரன் எம்.பி. கண்டனம்

Suganthini Ratnam   / 2012 மே 11 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலன்னறுவை எல்லையில் அமைந்துள்ள புணானை விநாயகர் ஆலயத்தின் விக்கிரகங்கள் திருடப்பட்டமை இந்து மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புணானைக் கிராமமானது மிகவும் பழமை மிக்க ஒரு இந்துக்கிராமமாகும். புணானை புகையிர நிலையத்திற்கு அருகாமையில் மிகப்பழமை வாய்ந்த விநாயகர் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அந்த ஆலயச் சூழல் பாதுகாப்பு படையினரின் முகாமாக விளங்கிய காரணத்தால் அவ் ஆலயத்தை புனரமைப்பதோ, வழிபடுவதோ அம்மக்களால் முடியாத காரணமாக இருந்தது.

தற்போது அப்பகுதியில் இருந்து படைகள் அகற்றப்பட்ட சூழலில் அவ் ஆலயத்தை மக்கள் வழிபடச் செல்கின்றனர். அங்கு இராணுவ பொலிஸ் குடியிருப்புக்கள் இருந்ததால் தற்காலிக வழிபாட்டு தலத்தை பாதுகாப்பு படையினர் ஸ்தாபித்து இருந்தனர். ஆனால் இன்று படையினர் அகன்ற பின் அவ்வழிபாட்டுத் தலத்தை புதுப்பித்துள்ளனர்.

ஒரு சில தினங்களுக்கு முன் அங்கிருந்த விநாயகர் ஆலயத்தின் விக்கிரகம் உட்பட சில விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன.

இவ்வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில மாதங்களாக இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் திருடப்படும்; நிலை அதிகரித்துள்ளது. குறிப்பாக வாகரைப் பிரதேசத்தின் பால்ச்சேனை பெரியசுவாமி ஆலய விக்கிரகங்கள் அண்மையில் திருடப்பட்டன. அதேபோன்று பிரதேசத்தில சில ஆலயங்களிலும் இவ்வாறன விக்கர திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில்  பொலிஸ் நிலையங்களில்; மக்களும் ஆலய நிர்வாகத்தினரும் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.  ஆனால் இதுவரை ஆலயங்களில் திருடப்பட்ட எந்தப் பொருட்களும் பொலிஸாரினாலோ பாதுகாப்புத் தரப்பினராலோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வேளை பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து விரைவாக சம்பவங்களின் சூத்திரதாரியை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும். இந்நிலை தொடர இனியும் அனுமதிக்க முடியாது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .