2026 மே 04, திங்கட்கிழமை

மிருகங்களின் உடற்பாக விற்பனையில் ஈடுபட்ட இரு இந்தியர்கள் கைது

Menaka Mookandi   / 2012 மே 12 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மிருகங்களின் உடற்பாகங்களை விற்பனை செய்துகொண்டிருந்த இரு இந்திய பிரஜைகளை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கையிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளதுடன், மிருகங்களின் உடற்பாகங்களையும் விற்பனை செய்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்த சில மிருகங்களில் உடற் பகுதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .