2026 மே 04, திங்கட்கிழமை

டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக சட்டநடிவடிக்கை

Kogilavani   / 2012 மே 13 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், எம்.சுக்ரி)


மட்டக்களப்பு சுகாதார அலுவலகப் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா மற்றும் மஞ்சந்தொடுவாய் பகுதிகளில் நேற்று சனிக்கிழமை மேற் கொள்ளப்பட்ட டெங்கு பரிசேதணை நடவடிக்கையின் போது ஆறு வீடுகளிலுள்ள குடி நீர் கிணறுகளில் டெங்கு நுளம்புகளை பரவும் வகையிலான சூழல் காணப்பட்டதால்; அவர்களுக்கெதிரக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி கே.ரஞ்சன் தெரிவித்தார்.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சுகாதார அலுவலகப்பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சுகாதார அலுவலகமும், மட்டக்களப்பு மாநகர சபையும் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை மேற்கொண்டுவருகின்றது.

மட்டக்களப்பு சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள பகுதிகளில் டெங்கு அதிகமாக இணங்கானப்பட்ட பகுதியான நாவற்குடா பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முதற் கட்டமாக நேற்று நடைபெற்றது.

இதன்போது 244 வீடுகள் டெங்கு பரிசோதணைக்குட் படுத்தப்பட்டன. இதில் 6 வீடுகளிலுள்ள குடிநீர் கிணறுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்பட்டதால் அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இவர்களுக்கெதிரான வழக்கு தொடரப்படவுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி கே.ரஞ்சன் தெரிவித்தார்.

இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ரஞ்சன், மற்றும் பிராந்திய  மலேரியா தடுப்பு அதிகாரி டாக்டர் ஏ.எம்.பரீட் அஹமட், மட்டக்களப்பு மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ்.தேவராசா உட்பட சுகாதார அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இந்த டெங்கு பரிசோதணை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .