2026 மே 04, திங்கட்கிழமை

குரங்கின் தொல்லையால் மக்கள் சிரமம்

Suganthini Ratnam   / 2012 மே 13 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வாழைச்சேனை துறைமுகப்பகுதியில் காட்டுக் குரங்கொன்றின் தொல்லையால் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது தொடர்ந்தவண்ணமுள்ளன.

இக்குரங்கானது வாழைச்சேனை ஆற்றங்கரைப் பகுதியிலுள்ள கண்ணாக்காட்டில் வசித்து வருகின்றது. இவ்வழியால் நாசிவன்தீவு கிராமத்திற்;கு செல்லும் மக்களை இக்குரங்கானது கடித்தும் விறாண்டியும் கன்னத்தில் அறைந்தும் தொல்லை கொடுத்து வருகின்றது.  இதன் காரணமாக இப்பகுதியால் செல்லும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம், வனஜீவராசிகள் திணைக்களம்,  கோறளைப்பற்று தவிசாளர் ஆகியோரிடம் முறையிட்டும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பொதுமக்கள் தெரிவித்தனர். இக்குரங்கின் தொல்லையிலிருந்து தங்களை காப்பாற்றுமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .