2026 மே 04, திங்கட்கிழமை

திண்மக் கழிவுகளை பிரயோசனப்படுத்துவது தொடர்பாக விழிப்பூட்டும் நிகழ்வு

Super User   / 2012 மே 13 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேச சபைகளை இணைத்து  திண்மக்கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சி திட்டம் ஒன்றினை யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஓட்டமாவடி நதா சமூக மேம்பாட்டு ஒன்றியம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக திண்மக் கழிவுகளை எவ்வாறு பிரயோசனப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு தொடர்பான முழு நாள் கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

திண்மக்கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சி திட்ட இனைப்பாளர் எம்.ரி.எம்.பாரிஸ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர் ஆகியோர் கலந்துகொண்டதுடன் வளவாலர்களாக கே.இராமச்சந்திரன், வை.எம்.நிம்ஸாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

"குறித்த இரு பிரதேச சபைகளின் எல்லை கிராம பகுதிகளில் குப்பை குழங்கள் கொட்டப்படுவதனால் எல்லை பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கெண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் குறித்த பகுதி மக்களை உள்வாங்கி  திண்மக்கழிவு முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள்  நிகழ்ச்சி திட்டங்களை  இரு பிரதேச சபைகளின் ஒத்துழைப்புடன் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக" நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.ரி.எம்.பாரிஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .