2026 மே 04, திங்கட்கிழமை

புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 மே 14 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன்  நிர்மாணிக்கப்பட்ட பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 17 மில்லியன் ரூபா நிதியுதவியுடனும் யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடனும் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், மீள்குடியேற்ற பிரதியமைச்சர்; விநாயகமூர்த்தி முரளிதரன், மாகாண சுகாதாரத்துறை அமைசச்ர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு உறுப்பினர்; ஏ.சி.கிருஸ்னாணந்தராஜா, பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், கிழக்கு பிராந்திய யுனிசெப் வதிவிடப் பிரதிநிதி அஸதுர் றஹ்மான், சர்வோதய நிறுவன பொதுச் செயலாளர் வின்னி ஆரியரெட்ன, பணிப்பாளர் ரவீந்திர ஆரியவிக்ரம உள்ளிட்ட பலர் இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .