2026 மே 04, திங்கட்கிழமை

ஏறாவூரில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

Kogilavani   / 2012 மே 15 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு - வந்தாறுமூலைப் பகுதிகளில் வீதிகளில் அலைந்து திரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த 30 கட்டாக்காலி மாடுகளை ஏறாவூர் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை பிடித்துள்ளனர். 

வீதிகளில் அலைந்து திரியும் மாடுகளால் பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு செய்து வந்த முறைப்பாட்டை அடுத்துஇக் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.பி.எச்.எச். சனத்குமார பண்டாரவின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் பரிசோதகர் ஏ.கே. மோகோட்டின் தலைமையிலான சூழல் பாதுகாப்பு பொலிஸ் குழுவினரும் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்களும் இணைந்து இந்தக் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவின்பேரில் ஒரு கட்டாக்காலிக்கு 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கட்டாக்காலிகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கையும் செய்து விடுவிக்கப்பட்டார்கள்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .