2026 மே 04, திங்கட்கிழமை

சந்தணமடு ஆற்றில் மண் அகழ்வில் ஈடுபட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

Kogilavani   / 2012 மே 15 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

சந்தணமடு ஆற்றில் மண் அகழ்வு தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் முயற்சியால் நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சந்தன மடு ஆற்றிலே மண் அகழ்வுத் தொழிலை மேற்கொள்வதன் மூலம் 1500 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். இவர்கள் மண் அகழ்வதிலே பல கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டு வந்தன.

இதனை அறிந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் இவ்விடத்திற்கு விஜயம் செய்து மண் அகழ்வுத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துக்கொண்டதுடன் இப்பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்தார்.

இந்நிலையில் உயர் அதிகாரிகள் பலர் நேற்று திங்கட்கிழமை இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தொழிலாளர்கள் மண் அகழ முடியும் எனும் நிரந்தரத் தீர்வினையும் வழங்கினர்.

இதேவேளை இப்பிச்சினை தொடர்பில் மட்டக்களப்பு கச்சேரியில் விசேட கூட்டமொன்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நேரடி விஜயத்தின்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், பூகோள சரிதவியல் பணிப்பாளர் அணில் பீரிஸ், ஏறாவூர் பிரதேசசபை தவிசாளர் வினோத், ஏறாவூர் பிரதேச செயலாளர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் மேற் கூறப்பட்ட அதிகாரிகளுடன் உதவி அரசாங்க அதிபர் மற்றும் பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .