2026 மே 04, திங்கட்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சகர வண்டிகள் வழங்கல்

Super User   / 2012 மே 15 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)


தனியார் போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து வசதியற்ற 200 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சகர வண்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் வைபவம் ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தனியார் போக்கவரத்து அமைச்சர் சி.பி.ரத்னாயக்க, கிழக்கு மாகாண கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா, கிழக்கு மகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், தேசிய போக்குவரத்து ஆணைக்கழுவின் தலைவர் ரொசான் குணவர்த்தன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலுள்ள 200 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மாணவர்களுக்கான கவசம் என்பன வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .