2026 மே 04, திங்கட்கிழமை

ஏறாவூர், அல் - அக்சா கிராமத்திலுள்ள குடிசை வீடுகள் தீ வைத்து எரிப்பு

Super User   / 2012 மே 15 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர். அனுருத்தன், ரி.லோஹித்)

ஏறாவூர், தாமரைக்கேணி அல் - அக்சா புதிய குடியேற்ற கிராமத்திலுள்ள குடிசை வீடுகள் இனந்தெரியாத குழுவினரால் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை தீ வைத்து எரிக்கப்படடுள்ளன.

இதனால் இரண்டு குடிசை வீடுகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. சம்பவ நேரம் வீட்டில் எவரும் தங்கியிருக்காமையினால் உயிர் சேதங்கள் ஏற்படாத போதிலும் குடிசைக்குளிருந்த அனைத்து உடமைகளும் எரிந்துள்ளது.

கடந்த கால யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பபட்டு  வறுமை நிலையிலுள்ள 30 குடும்பங்கள் இங்கு குடியமர்ந்துள்ளனர். இவர்களது நலன் கருதி ஏறாவூரை  சேர்ந்த நபர் ஒருவர் காணிகளை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

இதேவேளை, ஏறாவூர் நகர சபை உறுப்பினரும் வர்த்தக சங்க தலைவருமான எம். எல். ரெபு பாசம் சம்பவ இடத்திற்க்கு நேரடியாக விஜயம் செய்து பாதிக்க்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை கையளித்ததுடன் ஆறுதல் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • Rahuman Wednesday, 16 May 2012 10:11 AM

    எமது மக்களின் துயரை உடன் வெளியிட்ட மிரர் நிறுவனத்திற்கும் நகர சபை உறுப்பினருக்கும் நன்றி=ஏறாவுர் மக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .