2026 மே 04, திங்கட்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறை ஒரு வாரத்தில் தீர்க்கப்படும்: கிழக்கு மாகாண ஆளுநர்

Suganthini Ratnam   / 2012 மே 16 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் காணப்படும் இரு பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தலைமையில் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயம், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் ஆகியவற்றின்; அதிபர்களும்; பாடசாலை அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகளும் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  ஆளுநரைச் சந்தித்து ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் தெரிவித்தனர். இதன்போதே ஆளுநர் இதற்கான உறுதிமொழியை வழங்கினார்.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ரீ.ஏ.நிஸாம், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஈ.போல், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன்,; ஆளுநர்
அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளின் தேவைகளை கண்டறிவதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு மிக விரைவில் விஜயம் செய்து பாடசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் பெற்றுத் தருவார்கள் என தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .