2026 மே 04, திங்கட்கிழமை

குடிசைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் உடமைகள் எறிந்து நாசம்

Kogilavani   / 2012 மே 16 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, ஏறாவூர் தாமரைக்கேணி அல் அக்சா புதிய குடியேற்ற கிராமத்திலுள்ள குடிசைகள் இரண்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குடிசைக்குள் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக ஏறாவூர் நகரசபை உறுப்பினர் எம். எல். ரெபு பாசம் தெரிவித்தார்.

இச்சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. குடிசைகளுக்குள் ஒருவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் தீவிபத்து இடம்பெற்றதால் உயரிசேதங்கள் எதுவும் இடம்பெறவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசம் ஊடாக சவுக்கடி கடற்கரைக்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இக்குடிசைகளில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஏறாவூர் நகர சபை உறுப்பினரும் வர்த்தக சங்க தலைவருமான எம்.எல்.ரெபு பாசம் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .