2026 மே 04, திங்கட்கிழமை

பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை விற்றவர்களுக்கு அபராதம்; ஹோட்டல் உரிமையாளருக்கு பிடியாணை

Super User   / 2012 மே 16 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் திடீர சோதனை இன்று புதன்கிழமை காலை ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.

உணவகங்கள்இ பலசரக்கு கடைகள், சுப்பர் மார்கெட்டுகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் இந்தத் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதுஇ மனித பாவனைக்கு உதவாத பழுதான சோறுஇ இடியப்பம்இ பராட்டாஇ மீன்இ இறைச்சி மற்றும் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த இறந்த கோழி என்பன கைப்பற்றப்பட்டன.

இன்றைய தினமே ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுஇ ஹோட்டல் உரிமையாளர்கள் மூவருக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரலிப்புத் தன்மையுடன் கூடிய பிஸ்கட்டுக்களை விற்பனை செய்ததை அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியதை அடுத்து, பலசரக்கு கடை உரிமையாளர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட வேளையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் 6இ000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டது.

அறுப்பதற்கு முன் இறந்த கோழிகளை விற்பனை செய்ய முயற்சி செய்த இரு நபர்களுக்கு தலா 12இ000 ரூபாய் செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன்இ மனித பாவினைக்கு உதவாத உணவு பொருட்களை விற்பனை செய்த ஒரு ஹோட்டல் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த திடீர் சுற்றிவளைப்பு பரிசோதனைகள் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். தாரிக் அவர்களின் ஆலோசனையின் பேரில் இடம்பெற்றது. இந்தப் பரிசோதனைகளில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல் சுகாதாரப் பரிசோதகர்களான எஸ். சந்திரசிறி மற்றும் யூ.எல். முஹம்மட் ஜின்னா ஆகியோரும் பங்குபற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .