2026 மே 04, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Super User   / 2012 மே 17 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்துவரும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எஸ்.அமரசிறி தலைமையிலான பொலிஸ் புலனாய்வு அதிகாரி எம்.தாஹா, மற்றும் கிருபா ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே இந்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தங்க நகை உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்;றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்ப்பட்ட இவ்விரண்டு சந்தேக நபர்களும் தாழங்குடா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இக்கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .