2026 மே 04, திங்கட்கிழமை

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஆண்டு நிறைவு விழா

Suganthini Ratnam   / 2012 மே 17 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்,ரி.லோஹித்)

மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவும் விருது வழங்கும் வைபவமும் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தரிசனம் பாடசாலை மண்டபத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

தலைவர் கே.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் செங்கலடி பிரதேச செயலாளர் எம்.உதயதர் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் பாராட்டி விருது வழங்கி
கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தரிசனம் விழிப்புலனற்றோர் பாசாலை 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை 16 விழிப்புலனற்ற மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .