2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் கைத்தொழிற்துறை தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 மே 18 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


கைத்தொழில்துறையை தேசிய மயப்படுத்துவதற்காகவும் மாவட்டத்தில் உள்ள கைத்தொழிலாளர்கள் சிறந்த தொழிற்துறையினை மேற்கொள்வதற்குமான வழிவகைகளை ஏற்படுத்திகொடுப்பதற்குமான கலந்துரையாடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை பகல் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிறீன் கார்டன் விடுதியில் நடைபெற்றது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஏற்பாட்டிலும் அவரது தலைமையிலும் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்; கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி ரி.பிரபாகரன், பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ துறை தலைவர் வ.கனகசிங்கம், விரிவுரையாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் எம்.செல்வராசா, அச்சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் கீழ் மட்டத்தில் உள்ள கைத்தொழில் துறையினை உயர் நிலைக்கு கொண்டுசெல்வதற்கான செயற்றிட்டங்களை கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எதிர்காலத்தில் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உரையாற்றிய வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர்,

சகல வளங்களும் உள்ள நிலையில் அவற்றின் பயன்பாடுகள் கைத்தொழில் துறையில் மிகவும் குறைவான நிலையில் உள்ளன. அத்துடன் மாவட்டத்தில் பொருத்தமான தொழில்துறையினை தெரிவுசெய்வதில்; பல சிக்கல்களை கடந்த காலங்களில் எதிர்நோக்கியுள்ளோம். வர்த்தகர்களுக்கு சரியான வழிகாட்டிகள் இன்மையே இதற்கு காரணம். அத்துடன் தொழிற்துறையினை தெரிவுசெய்யும்போது அவற்றுக்காக வங்கிகளில் கடன்களை பெறும்போது அவற்றின் வட்டிவீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதால் பல கஷ்டங்களை எதிர்நோக்கியதாக தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த,  மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனருடன் கலந்துரையாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருவதாக தெரிவித்தார். அத்துடன் மாவட்டத்தில் உள்ள கைத்தொழிற் துறையாளர்கள் கிழக்கு  பல்கலைகழகத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தேவையான திட்டங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .