2026 மே 04, திங்கட்கிழமை

தென்மாகாணசபை பிரமுகர்கள் மட்டக்களப்பிற்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 மே 18 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

முதன்முறையாக தென்மாகாணசபையின் தவிசாளர், மாகாண அமைச்சர்கள், எதிர்க்;கட்சி தலைவர்,  ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்த இக்குழுவினரை மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் வரவேற்றனர்.

தற்போதைய சமாதான சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள்,  இம்மாவட்ட மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறியவும் கிழக்கு மற்றும் தென்மாகாண மக்களுக்கிடையில்  சிநேகபூர்வ நிலைமையை ஏற்படுத்துவதுமே இவ்விஜயத்தின்  நோக்கமென தென்மாகாணசபைத் தலைவர் கே.ஏ.சோமவன்ஸ தெரிவித்தார்.

தென்மாகாணசபைத் தவிசாளர் கே.ஏ.சோமவன்ஸ, தென்மாகாண விவசாய அமைச்சர் விஜய வீரசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் விஜயவிக்ரம,  பிரதித் தலைவர் கம்லி விதானாராச்சி,  ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்
கட்சி,  மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிளை பிரதிநிதித்துவப்படுத்தி  மாகாணசபை உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கே.அமலநாதன் கிழக்கு மாகாண செயலாளர் கே.பாஸ்கரன் மாநகர ஆணையாளர் க.சிவநாதன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .