2026 மே 04, திங்கட்கிழமை

யானைகளின் அட்டகாசத்தால் காந்திநகரில் இரு வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2012 மே 23 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்,ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காந்திநகர் கிராமத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் இரு வீடுகளை முற்றாகச் சேதமாக்கியுள்ளன.

ஏற்கெனவே 30 இற்கும்; மேற்பட்ட வீடுகளை காட்டு யானைகள் சேதமாக்கியுள்ளன. காட்டு யானைகளின் நடமாட்டத்திற்கு அஞ்சி பல குடும்பங்கள் இணைந்து இராப்பொழுதை ஒரே இடத்தில் கழித்துவருகின்றனர்.

இங்குள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி  பிரதேச செயலாளரைக் கோரவுள்ளதாக இக்கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .