2026 மே 04, திங்கட்கிழமை

யானைகளின் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபரிடம் கோரிக்கை

Kogilavani   / 2012 மே 23 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பின், படுவான்கரை பிரதேசத்தில் காட்டு யானைகளினால் எற்படும் பாதிப்புக்களை தடுக்க நடவடிக்கை ஏடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலத்தில் எற்பட்ட விவசாய பாதிப்புளை சீர்செய்தல், குறிப்பிட்ட காலத்துக்குள் சேதமாக்கப்பட்டுள்ள 60க்கும்  மேற்பட்ட வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தல், யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தல், அல்லது யானைகளுக்கான பாதுகாப்பு வேலி அமைக்கப்படாத இடங்களுக்கு வேலி அமைத்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக்கடித்ததில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

படுவான்கரை பிரதேசத்தில் உள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, செங்கலடி, வவுணதீவு போன்ற பிரதேசசெயலாளர் பிரிவுகளில் சில வருடங்களாக காட்டுயானைகளின் தொல்லைகளால் இப்பகுதி பல வகைகளிலும் பாதிப்படைந்துள்ளது.

காட்டு யானைகள்; குறிப்பாக வவுணதீவு பிரதேச செயலாளர் பகுதியில் இவ்வருட ஆரம்பம் தொடக்கம் இன்று வரை உன்னிச்சை, களிக்குளம், உறுகாமம், கற்பகக் கேணி, பாவக்கொடிச்சேனை, காந்திநகர், பன்சேனை, நெடுஞ்சேனை, பழங்குடிமடு போன்ற கிராமங்களுக்குள் புகுந்து அண்ணளவாக  60 வீடுகளுக்குமேல் உடைத்தும் தளபாடங்களை சேதப்படுத்தியுள்ளதுடன்; வீட்டில் உள்ள நெல், அரிசி, மா, உப்பு, சோளன் போன்றவற்றையும் தொடர்ச்;சியாக சாப்பிட்டு வருகின்றன.

பல விவசாயத் தோட்டங்கள் குறிப்பாக மரவள்ளித்தோட்டம் ஏனைய தானியப் பயிர்ச்செய்கை  உட்பட அனைத்தையும் சேதமாக்கி வருகின்றன.
இந்த யானைகள் பகல் நேரங்களில் இப்பகுதியில் உள்ள சிறிய காடுகளில் தங்கியிருந்து விட்டு மாலை 7 மணி தொடங்கி அதிகாலை 3 மணிவரையும் தொடர்ச்சியாக குடிமனைக்குள் புகுந்து சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக இரவுவேளைகளில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டமாக ஒன்றாக தங்கி நித்திரை இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பகல் வேளைகளில் அவர்கள் தமது அன்றாட வேலைகளை செய்யமுடியாமல் உள்ளதுடன் தமது ஜீவநோபாயத்தை செய்யமுடியாமல் வறுமையில் வாடுகின்றனர்.

இவ் யானைகள் பகலில் மேச்சலுக்கு செல்லாமல் இரவில் பசியுடன் வருவதால் வீடடை உடைத்து உணவுகளை தேடுகின்றது, அவ்வேளைகளில் மக்களை கண்டால் விரட்டி அடிக்கின்றது.

வீடுகளை உடைத்து சாப்பிட்டுப் பழகிய யானைகள் வீடுகளை தேடி இரவு வேளைகளில் அலைகின்றதால் தாய்மார் தமது சிறு குழந்தைகளைத் தூக்கிகொண்டு அடைக்கலம் தேடியவண்ணம் உள்ளனர்.

இக் காட்டுயானைகள்  தொடர்பாக  விவசாய அமைப்பு, கிராம அபிவிருத்திச் சங்கம், வன விலங்குகள் திணைகளம், பிரதேசசெயலாளர், அரசாங்க அதிபர்;  போன்றவகைள் இரவு பகலாக துரித நடவடிக்கை எடுத்தும் அவற்றின் நடவடிக்கைகளை   கட்டுப்படுத்தமுடியாமல்  உள்ளதால் அவை மீண்டும் மீண்டும் அழிவுகளை ஏற்படுத்தியவண்ணமே உள்ளன.
 
கிராமசேவையாளர்கள், பிரதேசசெயலாளர் ஆகியோர் பாதிப்புக்குள்ளான மக்களையும், வீடுகளையும் உடமைகளையும் பார்வையிட்டு சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.  ஆனால் நிரந்தரத்தீர்வு எட்டப்படவில்லை. யானைகள் குறைந்தது மூன்று நாளைக்கு ஒரு தடவையாவது அழிவுகளை ஏற்படுத்துகின்றது என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள், வவுணதீவு பிரதேச செயலாளர், மட்டக்களப்பு வனவிலங்கு பாதுகாப்பு திணைகள பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .