2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பிலுள்ள அருட் தந்தை வில்லியம் ஓல்டின் உருவச் சிலை சேதப்படுத்தப்பட்டது

Super User   / 2012 மே 23 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள அருட் தந்தை வில்லியம் ஓல்டின் உருவச் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது என புளியந்தீவு மெதடிஸ்த்த திருச்சபையின் முகாமை குரு அருட் தந்தை எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார்.

குறித்த கை மற்றும் கையிலிருந்த விளக்கு ஆகியன இன்று புதன்கிழமை (23.5.2012)சேதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தகவல் ஒன்றையடுத்து குறித்த சிலை நிறுவப்பட்டுள்ள இடத்திற்கு சென்று பார்த்த போது மேற்படி உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டேன் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளேன் என அருட் தந்தை எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார்.

1816ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்த ஐரோப்பிய நாட்டவரான அருட் தந்தை ரெவரட் வில்லியம் ஓல்ட் மட்டக்களப்பு மெதடிஸ்த் மத்திய கல்லூரியை உருவாக்கியதுடன் அருட் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். இவரின் நினைவாக 2001ஆம் ஆண்டு மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக உருவச்சிலை நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மற்றும் ஆரையம்பதி ஆகிய பிரதேசங்களில் நிறுவப்பட்டிருந்த ஐந்து சிலைகள் இனந்தெரியாதநபர்களினால் அண்மையில் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0

  • Kajanthan Thursday, 24 May 2012 02:11 AM

    அருட்திரு வில்லியம் ஒல்ட் 1814 இல் வருகை தந்தார் 1816 இல் அல்ல‌

    Reply : 0       0

    Hingston Monday, 28 May 2012 06:48 AM

    வருகை தந்தது 14.08.1814 இல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .