2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. தேவநாயகம் மண்டபத்தில் தீ

Menaka Mookandi   / 2012 மே 24 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், சுக்ரி, கே.எஸ்.வதனகுமார்)


மட்டக்களப்பு நகரிலுள்ள தேவநாயகம் மண்டபம் சற்றுமுன் தீப்பிடித்துள்ளது. இத்தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மண்டபத்தில் போடப்பட்டிருந்த திரைச்சீலை உட்பட அங்கிருந்த சில தளபாடங்கள் எரிந்து சேதமாகியுள்ளன.

இம்மண்டபத்தில் எற்பட்ட தீயினையடுத்து அங்குவிரைந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், தீ மண்டபத்தின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மட்க்களப்பு தலைமையக பொறுப்பதிகாரி எம்.திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

இத்தீப்பிடிப்பு சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்ற வருவதாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு இம்மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றக்கிழமை காலை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .