2026 மே 04, திங்கட்கிழமை

யுத்தத்தில் கணவரை இழந்த மட்டு. பெண்களுக்கு முச்சக்கரவண்டிகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 மே 25 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, கணவரை இழந்த பெண்களின் வாழ்வாதரத்தை முன்னேற்றும் முகமாக இந்திய அரசின் உதவியில் முச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வாழைச்சேனையில் அமைந்துள்ள இந்திய சேவா நிறுவனக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்திய அரசின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எட்டு பெண்களுக்கு முச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் உயர்ஸ்தானிகராலய செயலாளர் ஜெஸ்ரின் மோகன், கோறளைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு மற்றும் உயர்ஸ்தானிகராலய உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .