2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. காந்தி சிலைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் மலர் அஞ்சலி

Menaka Mookandi   / 2012 மே 25 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், எம்.சுக்ரி)


மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்;தானிகர் அசோக் கே. காந்தா, மட்டு நகரின் காந்தி சதுக்கத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலரஞ்சலி; செய்து வணக்கம் செலுத்தினார்.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மாநகர மேயர் சிவகீர்தா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையாளர் சிவநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்களும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், மாகர உறுப்பினர்களும் என பலரும் கலந்து கொண்டனர். கடந்த மாதத்தில் காந்தி சிலை உட்பட 4 சிலைகள் மட்டக்களப்பில் உடைக்கப்பட்ட பின்னர் மீண்டும் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .