2026 மே 04, திங்கட்கிழமை

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஊறனி அமெரிக்க மிசன் மண்டபத்திற்கு மாற்றம்

Super User   / 2012 மே 25 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          
                                                                                    (ரி.லோஹித்)

இலங்கை தமிழரசுக்கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பு ஊறணியில் உள்ள  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க மிசன் மடண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாடு நடைபெறவிருந்த  தேவநாயகம் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டமையினால் இம்மாநாடு அமெரிக்க மிசன் மடண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்  மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் எந்த விதமான மாற்றமும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தின் தெரிவித்தார்.

இதேவேளை, கட்சியின் பழைய செயற்குழுவுக்கான கூட்டம் ஊறணியில் உள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில், இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தினை கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன், பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, நிருவாகச் செயலாளர் குகநாதன் ஆகியோர் நடத்தினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, சரவணபவன், பா.அரியநேத்திரன், சுமந்திரன்,  சீ.யோகேஸ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகசபை, திருகோணமலை துரைரெட்ணசிங்கம் உட்பட செற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள பொதுச்சபைக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மற்றும் கொழும்புக் கிளைகளின் சுமார் 150 வரையான உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய கூட்டத்தின் போது, புதிய தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேசிய மாநாட்டத் தீர்மானங்கள் தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கடந்தகாலச் செயற்பாடுகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன.




  Comments - 0

  • jeya Friday, 25 May 2012 04:56 PM

    நீங்களே கூடி நீங்களே முடிவெடுங்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .