2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் பல்சமய ஒன்றியம், சிவில் சமூகத்துடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Kogilavani   / 2012 மே 26 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி
)
மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தையும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பையும் மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்.

பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் மட்டு, அம்பாறை மறைமாவட்ட ஆயருமான கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், மனித உரிமை மீறல் நிலைவரம் போன்ற விடயங்கள் தொடர்பாக இந்திய உயர்ஸ்த்தானிகர் கேட்டறிந்துகொண்டார்.

இச்சந்திப்பில் மட்டு அம்பாறை மறைமாவட்ட துணை ஆயர் கலாநிதி பொன்னைய்யா ஜோசப், மௌலவி ஏ.எம்.அப்துல் காதர், கலாநிதி பிரேம்குமார் உட்பட பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி 5ஆம் குறிச்சி பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு சென்று அப்துல் ஜவாத் ஆலிம் நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபகர் மௌலவி ஏ.ஜே.அப்துர் றவூப் மிஸ்பாஹியை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.எம்.ஜெஸீம் உட்பட அப்துல் ஜவாத் ஆலீம் நம்பிக்கை நிதியத்தின் முக்கியஸ்தர்கள்
மற்றும் உலமாக்கள் கலந்துகொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .