2026 மே 04, திங்கட்கிழமை

தமிழரசுக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்பவர்களை ஏற்றிவந்த பஸ் மீது கல் வீச்சு

Suganthini Ratnam   / 2012 மே 27 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                 
                                                                                                               (ரி.லோஹித்,எம்.சுக்ரி,ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றுவரும்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்பவர்களை  யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றிவந்த பஸ் மீது கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்தபோது மாநாட்டு மண்டபத்திற்குள்  நுழைந்த சிலர் குழப்பம் விளைவிக்க முனைந்தனர். இருப்பினும் அவர்களை பொதுமக்கள் வெளியேற்றினர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

தமது மாநாட்டைக் குழப்புவதற்கு சிலர் முனைந்ததாகவும் இருப்பினும் எந்தவித  பாதிப்புமின்றி மாநாடு சிறப்பாக நடைபெற்றுவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில்  இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இலங்கைத் தமிழரசுக கட்சியின் மாநாட்டைக் கண்டித்து மட்டக்களப்பு நகரின் ஒரு சில இடங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், இம்மாநாட்டிற்கும்  எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் கூட்டமைப்பு அதிருப்தியாளர்களெனத் தெரிவித்து இத்துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.  கறுப்புக்கொடிகள் மட்டக்களப்பு நகரின் சந்தி சுற்றுவட்டம் மற்றும் நகரின் வீதிகளிலும் கட்டப்பட்டுள்ளன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .