2026 மே 04, திங்கட்கிழமை

விமான சேவைகள் அபிவிருத்தி அமைச்சர் மட்டு.விஜயம்

Kogilavani   / 2012 மே 28 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு,  விமானநிலையத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்து ஆராய்வதற்காக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜெயசேகர நேற்று காலை மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது, விமானநிலைய ஓடுபாதை, விமான நிலையத்தின் முக்கிய இடங்களை பார்வையிட்ட அமைச்சர் மிக விரைவில் இவ் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், விமானப்படை அதிகாரிகள், விமான நிலைய முக்கியஸ்தர்களும் அமைச்சு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேற்படி விமான நிலையமானது 1958ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நிறுவப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .