2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஜனசெவன வீட்டுத் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 மே 29 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


கிராமத்துக்கு ஒரு வீடு திட்டத்தின் நாடளாவிய ரீதியில் ஜனசெவன 10 இலட்சம் வீடமைப்பு திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேசிய நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கின் அடிப்படையிலும் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரசன்சவின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு மட்டக்களப்பில் இன்று ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 345 கிராம சேவையாளர்கள் பிரிவில் இந்த திட்டத்தின் மூலம் வறிய நிலையில் உள்ள 345 குடும்பத்தினருக்கு இந்த வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன.

இதன் ஆரம்ப நிகழ்வு போரினால் கடுமையாக பாதிப்பட்ட போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தும்பங்கேணியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்பாளருமான திருமதி ருத்திரமலர் ஞானபாஸ்கரன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம், மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா உட்பட பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனசென திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள 345 வீடுகளில் முதல் வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது. அத்துடன் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட 14 கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து தேசிய நிகழ்வு இடம்பெற்றதுடன் பிரதேச கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .