2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

உன்னிச்சை அணைக்கட்டு பாலத்தின் கீழ் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2012 மே 29 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


மட்டக்களப்பு, உன்னிச்சைக் குளத்தின் அணைக்கட்டு பாலத்திற்குக் கீழிருந்து பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸ் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளனர்.

விமானத்தை சுடும் துப்பாக்கி 1, ரீ - 56 ரக துப்பாக்கிகள் 9, ரீ – 81 ரக மெகஸின்கள் 29, ரீ – 56 ரக மெகஸின்கள் 2, எம்  - 16 ரக  மெகஸின்கள் 6, 9 – எம்.எம் ரக மகஸின் 1, மோட்டார் பியுஸ் 2, லிங்க் 21 உட்பட 18 வகையான ஆயுத உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் பாலத்திற்குக் கீழே உர பைகளில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு ஆயித்தியமலை  பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் அபேசிரி குணவர்தனவின் உத்தரவின் பேரில் ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பண்டார மற்றும் வவுணதீவு விஷேட அதிரடிப்படையின்  இரண்டாவது கட்டளை அதிகாரி எஸ்.எம். பிரேமச்சந்திர, மற்றும் விஷேட அதிரடி படையின் குண்டு செயலிழப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். பொதேஜு ஆகியோர்  தலைமையிலான ஆயுத மீட்பு அணியினர் இந்த ஆயுதங்களை உன்னிச்சைக் குளத்தின் அடியிலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.

சில ஆயுதங்கள் நீர் உட்புகாத கொள்கலன்களில் பொதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0

  • bzukmar Tuesday, 29 May 2012 06:06 PM

    மீண்டும் புலி கிலி......பிரயாணிகள் சோதனை சாவடி.......?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .