2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சனசமுக நிலையங்களுக்கு ஒலிபெருக்கி உபகரணங்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2012 ஜூலை 11 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குற்பட்ட மூன்று சனசமுக நிலையங்களுக்கு ஒலிபெருக்கி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரின் பண்முகப்படுத்தப்பட்ட இரண்டு  லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடி ஹிறா சன சமுக நிலையம், மீராவோடை கிழக்கு சன சமுக நிலையம், மாஞ்சோலை சன சமுக நிலையம் ஆகிய மூன்று சன சமுக நிலையங்களுக்கு ஒலிபெருக்கி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின்போது தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் சன சமுக நிலைய நிர்வாகிகளிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் செயலாளர் ஈர் தர்மலிங்கம் உட்பட பிரதேசசபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .