2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பட்டிப்பளையில் இருவேறு சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 12 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு பட்டிப்பளை (கொக்கட்டிச்சோலை) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நேற்று புதன்கிழமை யானை தாக்கியமை, நீரில் விழுந்தமை ஆகிய இருவேறு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை, படையாண்டவெளியில், 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உப்போடைக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை நீரில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

வலிப்பு நோய்க்குட்பட்டிருந்த இவர் நீரில் விழுந்ததனால் ஏற்பட்ட மரணம் என மரண விசாரணையை மேற்கொண்ட களுவாஞ்சிக்குடி மரண விசாரணை அதிகாரி சண்முகம் பேரின்பநாயகம் தெரிவித்தார்.

அதே நேரம், பன்சேனைப்பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் நாவலடிப்பள்ளத்தில் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

நாவலடிப்பள்ளம் பிரதேசத்தில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த வேளை வயலுக்குள் நுழைந்த யானையை விரட்ட ரோச்லைட் அடித்துச் துரத்திச்சென்ற வேளை யானை தாக்கியதனாலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுவரப்பட்ட நிலையில், மரண விசாரணையை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி சண்முகம் பேரின்பநாயகம் யானை தாக்கியதால் ஏற்பட்ட விபத்து மரணம் என தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .