2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தாமரைக்கேணி மாதிரிக்கிராமம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் தாமரைக்கேணி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மாதிரிக்கிராமம் நேற்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், இங்கு நிர்மாணிக்கப்பட்ட  வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. 

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளுக்கமைய சவூதி அரேபியாவிலுள்ள தாறுல் ஹுதா நிறுவனத்தினால் இக்கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில்  25 வீடுகள்  நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இப்பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்களும் இதன்போது வழங்கப்பட்டன. 

இதற்கான நிகழ்வில்; பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .