2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மட்டு. மாவட்டத்திற்கு விஜயம்

Super User   / 2012 ஜூலை 15 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்கா மற்றும் மட்டக்களப்பு மாநக ஆணையாளர் கே.சிவநாதன் உட்பட பலர் இந்நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் தற்போது மாவட்ட செயலகத்திலேயே இயங்கி வருகின்றது. கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் குறித்த புதிய கட்டிடத்திற்கு தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் இடமாற்றப்படும் என மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .